/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு; முதல் கட்டமாக 100 பேருக்கு ஒப்படைப்பு

ADDED : மே 21, 2025 06:20 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 864 அடுக்குமாடி வீடுகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 100 பயனாளிகளுக்கு ஒப்படைப்பு அணை வழங்கப்பட்டது
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சம்பந்தபுரம் பகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர் அருகே நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக 864 தொகுப்பு வீடுகள் கட்ட 2020 மே மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து 2023ல் பணிகள் முடிந்தன.
ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை, வரவேற்பு அறை வசதிகளுடன் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில் கழிவு நீர் வெளியேற்றம் சுத்திகரிப்பு பணிகளுக்காக தாமதமாகி பணிகள் முடிவு பெற்றன.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் ராஜ கொம்பையா பாண்டியன், உதவி பொறியாளர் ஸ்டெசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக 100 பயனாளிகளுக்கு வீடு ஒப்படைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது.