/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் அறுவடை இயந்திர வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும்
/
நெல் அறுவடை இயந்திர வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும்
நெல் அறுவடை இயந்திர வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும்
நெல் அறுவடை இயந்திர வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும்
ADDED : ஜன 22, 2025 06:31 AM

சிவகாசி : நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ராமச்சந்திர ராஜா, ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் இருந்த ஒரே ஒரு நெல் அறுவடை இயந்திரமும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தனியார் நெல் அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தியே அறுவடை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இடைத்தரகர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும்.
அம்மையப்பன், தேவதானம்: ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்புகளில் அணில்கள் தேங்காய்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஜோசப் ஆரோக்கிய ராஜ், நத்தம்பட்டி: காட்டுப்பன்றிகளால் பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணசாமி, துரைச்சாமியாபுரம்: எம்.துரைச்சாமிபுரத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வேளாண் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை, விளை நிலங்களுக்குள் வரும் காட்டு பன்றிகளை அழிப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சப் கலெக்டர் பதிலளித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வேளாண் அதிகாரிகள் வருவதற்கு நாளைக்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.