/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டசபையில் ஆளுநரின் செயல் அபத்தமானது
/
சட்டசபையில் ஆளுநரின் செயல் அபத்தமானது
ADDED : ஜன 07, 2025 04:19 AM
அருப்புக்கோட்டை: சட்டசபையில் ஆளுநரின் செயல் அபத்தமானது,  என மாணிக்கம் தாகூர், எம்.பி.,  தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம்  மண்டல வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை திருவிழா நிறைவு நாளில் பங்கேற்ற பின் அவர்  கூறியதாவது: சட்டசபையில் ஆளுநர் வெளியேறிய செயல் விளையாட்டுத்தனமாகவும்  அபத்தமாகவும் உள்ளது.  முதல்வரை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழக சட்ட சபையையும்,  தமிழகத்தையும், தமிழையும் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அருப்புக்கோட்டை வழியாக மதுரை -  தூத்துக்குடி அகல ரயில் பாதை  திட்டத்தில் முழுமையாக நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.  நிலம் எடுக்கப்பட்ட பின் போதிய நிதியை கொடுக்காமல் அரசியல் செய்து மத்திய அரசு இந்த திட்டத்தை கிடைப்பில் போட்டுள்ளது.  இந்த திட்டத்திற்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி வருகிறோம்.
விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரும் பிரச்னையாக காட்டுப்பன்றிகள் தொல்லை இருக்கிறது. மத்திய அரசு சட்டத்தில் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். என்றார்.

