/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்
/
சிவகாசியில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்
ADDED : ஜன 14, 2024 04:43 AM

சிவகாசி: சிவகாசி சோனி மைதானத்தில் உலகப் புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் நடைபெறுகிறது.
தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் 30 ஆண்டுகளாக மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, எகிப்து உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
இந்த சர்க்கஸ் சிவகாசி சோனி மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. ரஷ்யா, சீனா ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வல்லுநர்கள் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று சாகசங்களை செய்து காண்பித்தனர்.
அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பேட், 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரிங் பேலன்ஸ், பல வளயங்களை கால்களால் விளையாடும் ரஷ்யன் புட் ஜங்கினின், பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் ரஷ்யன் லேசோ, உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் , அந்தரத்தில் பெண் தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், அந்தரத்தில் தொங்கும் பேலன்சிங் டிரிபிள் உள்ளிட்ட பல்வேறு வகையான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தினமும் மதியம் ஒன்று, மாலை 4:00, இரவு 7:00 மணி என மூன்று காட்சிகளாக சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற உள்ள இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு டிக்கெட் விலை ரூ. 100, 200, 300.

