/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி குமிழாங்குளம் ரோட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : அக் 24, 2025 02:22 AM
காரியாபட்டி: காரியாபட்டி குமிழாங்குளம் ரோட்டில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிற்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கிறது. வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளதால் விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி குமிழாங்குளத்திற்கு எஸ். மறைக்குளம் வழியாக ஊருக்குள் சென்று செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் செல்ல முடியாது.
பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் தேனூர் -மயிலி மெயின் ரோட்டில் இருந்து ரோடு போடப்பட்டது.
பெரிய வாகனங்கள் கூட எளிதில் சென்று வர முடியும். இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால் ரோடு ஓரத்தில் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. வாகனங்களில் உரசுகின்றன. டூவீலரில் செல்பவர்களின் கண்களை பதம் பார்க்கின்றன. வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்படுகிறது.
தனியாக செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.