/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அவசர கதியில் நடந்த சுற்றுச்சுவர் பணி இப்போதே சேதமாகும் அவலம்
/
அவசர கதியில் நடந்த சுற்றுச்சுவர் பணி இப்போதே சேதமாகும் அவலம்
அவசர கதியில் நடந்த சுற்றுச்சுவர் பணி இப்போதே சேதமாகும் அவலம்
அவசர கதியில் நடந்த சுற்றுச்சுவர் பணி இப்போதே சேதமாகும் அவலம்
ADDED : டிச 24, 2024 04:17 AM

விருதுநகர்: விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் பணி அவசர கதியில் நடந்ததால் அதன் சுற்றுச்சுவர் இப்போதே சிமென்ட் பெயர்ந்து சேதமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகம் நவ. 10ல் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் திறப்பு விழாவுக்காக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் கியூரிங் கூட முடியாமல் அவசர கதியில் செயப்பட்டது. கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் செயல்பாட்டிற்கு வந்து ஒன்றரை மாதத்தில் சேதமாகி உள்ளது. அதன் சிமென்ட் பெயர்ந்துள்ளது. குறைதீர் கூட்டத்திற்கு வந்து சென்ற மக்கள் இதை பார்த்து அதிருப்தி பட்டு கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகதி பணியை கட்டடத்திற்கு உள்ளேயும் செய்துள்ளனரா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்த வேண்டும்.