/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளிமாநில கஞ்சா விற்பனை அதிகரிப்பு தீவிர கண்காணிப்பு அவசியம்
/
வெளிமாநில கஞ்சா விற்பனை அதிகரிப்பு தீவிர கண்காணிப்பு அவசியம்
வெளிமாநில கஞ்சா விற்பனை அதிகரிப்பு தீவிர கண்காணிப்பு அவசியம்
வெளிமாநில கஞ்சா விற்பனை அதிகரிப்பு தீவிர கண்காணிப்பு அவசியம்
ADDED : செப் 23, 2024 06:19 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஆந்திரா, பீகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்யும் மையமாக கிருஷ்ணன்கோவில் மாறி வருவதை முழு அளவில் தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானா, பீகார் போன்ற வெளி மாநிலங்களை சார்ந்த பல ஆயிரம் மாணவர்கள் கிருஷ்ணன் கோவிலில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கஞ்சா விற்பனையில் சில மாணவர்கள் ஈடுபடுவதை கிருஷ்ணன்கோவில் போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஆந்திரா, தெலுங்கானா சென்று வரும் மாணவர்கள் சிலர் அங்கிருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து மொத்தம், சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களுடன் படிக்கும் தமிழக மாணவர்கள் மூலமும் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைதான நிலையில் நேற்று முன்தினமும் பீகார், ஆந்திராவைச் சேர்ந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று கிருஷ்ணன் கோவில் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இரு மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை கண்டறிந்து விசாரித்து வருகின்றனர்.
எனவே கிருஷ்ணன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனையை முழு அளவில் தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.