sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி

/

சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி

சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி

சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி


ADDED : ஆக 01, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சாத்துார் அருகே நென்மேனி புனித இன்னாசியார் சர்ச்சில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

சாத்துார் அருகே நென்மேனி புனித இன்னாசியார் சர்ச்சில் 136வது ஆண்டு திருவிழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சென்னை நற்செய்தி குழுவினரின் ஆராதனை வழிபாடுகள் நடந்தது. அருட்பணியாளர்கள் ரொனால்டு, சகாய ஜான் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. இரவு 11:30 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள்ராயன், அருட்பணியாளர்கள் பெர்னாட்ஷா, காந்தி, அருள்தாஸ், பிரின்ஸ், தேவராஜ் முன்னிலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அமலோற்பவ அன்னை, இன்னாசியார் திருஉருவங்கள் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காலை 11:00 மணிக்கு நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீரும் முடிந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us