/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கருவேலங்காடான கண்மாய்; பராமரிப்பின்றி பாழ் செங்குன்றாபுரம் விவசாயிகள் தவிப்பு
/
கருவேலங்காடான கண்மாய்; பராமரிப்பின்றி பாழ் செங்குன்றாபுரம் விவசாயிகள் தவிப்பு
கருவேலங்காடான கண்மாய்; பராமரிப்பின்றி பாழ் செங்குன்றாபுரம் விவசாயிகள் தவிப்பு
கருவேலங்காடான கண்மாய்; பராமரிப்பின்றி பாழ் செங்குன்றாபுரம் விவசாயிகள் தவிப்பு
ADDED : செப் 25, 2025 04:43 AM

விருதுநகர் : கிராமங்களின் விவசாயத்திற்கு உறுதுணையாகவும், வற்றாத வளமாகவும் இருந்த விருதுநகர் செங்குன்றாபுரம் கண்மாய் தற்போது முற்றிலும் வறண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
விருதுநகர் ஒன்றியம் செங்குன்றாபுரம் ஊராட்சியில் இந்த கண்மாய் உள்ளது. இக்கண்மாய் விருதுநகர் செங்குன்றாபுரம் சுற்றுப்புற கிராம விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக ஒரு காலத்தில் இருந்தது. நாளடைவில் பராமரிப்பின்றி போனது. மேலும் சீமைக்கருவேல மரங்களும் கண்மாயை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து தற்போது அணையின் ஒரு பகுதி முழுதும் அவை தான் உள்ளன.
கண்மாய் வறண்ட பிறகும் யாரும் கண்டு கொள்ளாததால் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்போடு கழுங்கு, மடைகள் சேதமடைந்தன. சமீபத்தில் இதற்கு நிதி ஒதுக்கி கழுங்கு, மடைகளை சீரமைத்துள்ளனர். மழையை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் மறுபுறமோ கருவேலம் அதிகரித்து வருகிறது. கண்மாய் முதன் முதலாக வறண்ட போது விவசாயம் பார்த்தவர்கள் பிழைப்புக்காக வேறு வேலைகளுக்கு செல்ல துவங்கினர். இதனால் விளைநிலங்கள் பயன்படாமல் போனதுடன் வரத்து கால்வாயும் புதர் மண்டிவிட்டது.
தற்போது கண்மாயை சுற்றியுள்ள விவசாயிகள் சிலர் கிணற்றுநீர் பாசனத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
மடைகளில் மதுபாட்டில்களை உடைத்து போட்டுள்ளனர். மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கும். மற்றபடி மொத்தமாக நீர் தேங்கி பயன்படாது. மாவட்ட நிர்வாகம் இது போன்ற முக்கிய கண்மாய்களை கணக்கெடுத்து பருவமழை துவங்கும் முன் துார்வார வேண்டும்.