/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆய்வக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது
/
ஆய்வக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது
ADDED : ஜன 22, 2024 04:40 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காதது குறித்து தினமலரில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஜன.20ல் சம்பளம் வழங்கப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் 2022ல் 27 பேர், 2023ல் 12 பேர் ஆய்வக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் 2022 ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வரவில்லை. ஆனால் 2023 ல் பணியில் சேர்ந்த 12 பேருக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் ஜன. 18ல் செய்தி வெளியானது. இதனால் இரண்டு மாதமாக ஊழியர்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தை தமிழக அரசு ஜன. 20 ல் வழங்கியது.