ADDED : செப் 24, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு, செப்.25-
கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் 26, இவர் மீது
பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவில் தெற்கு தெருவில் சுந்தர மகாலிங்கம் என்பவரது வைக்கோல் படப்பிற்கும், கிழக்கு பகுதியில் அந்தோனி என்பவரது வைக்கோல் படப்பிற்கும் தீ வைத்துள்ளார். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
கூமாபட்டி போலீசார் தினேஷ் குமாரை கைது செய்தனர்.
