/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறுவை சிகிச்சை பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி
/
அறுவை சிகிச்சை பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி
அறுவை சிகிச்சை பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி
அறுவை சிகிச்சை பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி
ADDED : செப் 20, 2024 06:14 AM
சிவகாசி : சிவகாசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் மூச்சுத் திணறலால் இறந்தார்.
சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் 26. இவரது மனைவி ராஜலட்சுமி 24. இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்த நிலையில், வலி ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த நிலையில் நேற்று முன் தினம் காலை 10:37க்கு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தை நலமுடன் பிறந்தது.
அதே சமயத்தில் ராஜலட்சுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினருடன் செயற்கை சுவாசம் அளித்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.