/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பக்கத்து வீட்டில் நகை திருடி பைக் வாங்கிய வாலிபர் கைது உடந்தையாக இருந்த தாய், சித்தி கைது
/
பக்கத்து வீட்டில் நகை திருடி பைக் வாங்கிய வாலிபர் கைது உடந்தையாக இருந்த தாய், சித்தி கைது
பக்கத்து வீட்டில் நகை திருடி பைக் வாங்கிய வாலிபர் கைது உடந்தையாக இருந்த தாய், சித்தி கைது
பக்கத்து வீட்டில் நகை திருடி பைக் வாங்கிய வாலிபர் கைது உடந்தையாக இருந்த தாய், சித்தி கைது
ADDED : ஜன 18, 2025 12:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டு பீரோவில் இருந்து 11 பவுன் நகையை திருடி அடகு வைத்து விலை உயர்ந்த பைக் வாங்கிய காளிராஜையும், உடந்தையாக இருந்த தாய் பத்மாவதி, சித்தி ஆனந்தவள்ளி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்புரத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் மனைவி முத்துலட்சுமி 66, நெசவு தொழிலாளி. இவர் புரட்டாசி 3வது சனிக்கிழமை அன்று கோயிலுக்கு சென்று விட்டு, 11 பவுன் எடை கொண்ட 2 தங்க நகைகளை கழட்டி பீரோவில் வைத்துள்ளார். அதன்பின் அதை பயன்படுத்தவில்லை.
பொங்கலுக்கு அணிவதற்காக நேற்று முன்தினம் பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை. இதுகுறித்து அவரது மகன் கணேசன் நேற்று டவுன் போலீசில் புகார் செய்தார்.
இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளிராஜ் 19, மீது சந்தேகம் எழுந்தது.
காளிராஜ் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர். சமீபத்தில் விலை உயர்ந்த புது பைக் வாங்கி சுற்றி வந்துள்ளார்.
விசாரணையில் காளிராஜ் நகை திருடியது உறுதியானது.
போலீசார் கூறியது: சிறையில் இருந்த காளிராஜை பார்க்க தாய் பத்மாவதி வந்துள்ளார். அப்போது அடுத்த வீட்டில் நகை திருடி வைத்திருப்பதையும், அதை வைத்து தன்னை ஜாமினில் எடுக்குமாறும் கூறியுள்ளார். அதன்படி பத்மாவதி தனது பெயரில் ஒரு நகையையும், தனது தங்கை ஆனந்தவள்ளி பெயரில் மற்றொரு நகையையும் அடகு வைத்து பணம் பெற்று, காளிராஜை ஜாமினில் எடுத்துள்ளனர். மீத பணத்தில் குடும்ப கடனை அடைத்தும், காளிராஜ் விலை உயர்ந்த ஒரு பைக்வாங்கியதும் தெரியவந்தது என போலீசார் கூறினர்.
இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.