/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வாரியத்தினர் தடுத்தும் பூங்கா கட்டி ரூ.25 லட்சம் வீணடித்த நகராட்சி
/
மின்வாரியத்தினர் தடுத்தும் பூங்கா கட்டி ரூ.25 லட்சம் வீணடித்த நகராட்சி
மின்வாரியத்தினர் தடுத்தும் பூங்கா கட்டி ரூ.25 லட்சம் வீணடித்த நகராட்சி
மின்வாரியத்தினர் தடுத்தும் பூங்கா கட்டி ரூ.25 லட்சம் வீணடித்த நகராட்சி
ADDED : மார் 03, 2024 05:43 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி பூங்கா அமைக்க உள்ள இடத்தில் உயர் மின் அழுத்த டவர் இருப்பதால் பூங்கா அமைக்க வேண்டாம் என மின்வாரியத்தினர் அறிவுறுத்தியும்ரூ.25 லட்சம் செலவில் நகராட்சி பூங்காவை கட்டி நிதியை வீணடித்துள்ளது.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்தப் பகுதியில் புறநகர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு பூங்கா அமைக்க நகராட்சி முடிவு செய்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு 25 லட்சம் நிதியில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வந்தது.
பூங்கா அமைக்கும் இடத்தின் அருகிலேயே மின்வாரியத்தினர் உயர் மின் அழுத்த டவர் அமைத்துள்ளனர். அதனால் இங்கே பூங்கா அமைக்க வேண்டாம் என நகராட்சியிடம் அறிவுறுத்தினர்.
நகராட்சி நிர்வாகம் எங்கள் இடத்தில் தான் அமைக்கிறோம் என கூறி பூங்கா பணிகளை துவங்கி முடித்தனர்.
பூங்காவிற்கான மின் இணைப்பை மின்வாரியம் வழங்க மறுத்து விட்டது.
மேலும் பூங்கா பயன்பாட்டுக்கு வராததால் பாழடைந்து முட்செடிகள் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமலும், 25 லட்சம் ரூபாய் நிதியை நகராட்சி வீணடித்து விட்டது.
பூங்காவை புதுப்பிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது போன்ற பூங்காக்கள் நகரின் பல பகுதிகளில் கட்டப்பட்டு ஆண்டு கணக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. -

