/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லை
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லை
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லை
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லை
ADDED : நவ 01, 2024 04:10 AM
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் இல்லை. இதன் காரணமாக நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு மேல் சிகிச்சை என மாற்றும் நிலையுள்ளது.
திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2022 ஜன., 12ல் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரிகள் திறக்கப்பட்டன. விபத்தில் தலைக்காயம், மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட மூளை நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைமை, வட்டார மருத்துவமனைகளில் இருந்து புதிய மருத்துவக்கல்லுாரிகளுக்கு மேல் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு தேவையான மருத்துவ உதவிகள், பரிசோதனைகள், மருந்துகள் வழங்கப்படுகிறது. ஆனால் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லாததால் பொது மருத்துவத்தில் உள்ள டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் பிற மாவட்ட மருத்துவக்கல்லுாரியின் மூளை நரம்பியல் நிபுணர்களுக்கு நோயாளியின் பரிசோதனை முடிவுகள் அனுப்பப்பட்டு அதை அடிப்படையாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் தொடர் கண்காணிப்பு தேவைப்படுபவர்கள் மேல் சிகிச்சைக்காக பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு ஏற்படுத்து வரை அறுவை சிகிச்சை, மருத்துவம் அளிக்க தேவையான மருத்துவ நிபுணர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.