/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எண்ணிக்கை தான் அதிகம்: வேலைக்கு ஆளில்லை அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் நிலை

ADDED : ஆக 06, 2025 08:40 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் கணக்கில் அதிக எண்ணிக்கையில் போலீசார் இருந்தும், மாற்றுப்பணிக்கு பலர் சென்று விடுவதால் இரவு நேர ரோந்து, புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் 48 போலீசார்கள் பணியிடத்தில் 41 போலீசார்கள் உள்ளனர். இவர்களில் வெளியூர் ,மாற்றுப் பணிக்கு 16 போலீசார் சென்று விடுகின்றனர். இவர்களைத் தவிர கோர்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 4 பேர் செல்கின்றனர். தாலுகா இன்ஸ்பெக்டர் வாகனம் ஓட்டுவதற்கு ஒருவரும் பணியில் உள்ளனர்.
இதில், ஹைவே பேட்ரோல், இரவு ரோந்து, ஈகிள் 21, மற்றும் தாலுகா ஸ்டேஷனுக்கு உட்பட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இரவு நேர ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு போலீசார் செல்ல முடிவதில்லை. இதனால் கிராமப் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு ,குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. பொது மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக விசாரணை செய்ய முடிவதில்லை. போதுமான போலீசார் இருந்தும் தினசரி பணி செய்ய முடியாமல் ஸ்டேஷன் திணறுகிறது.
மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாற்றுப் பணிகளுக்கு செல்லும் போலீசார்களை ஸ்டேஷன் பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.