/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோசல்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகள் தினசரி திண்டாடும் வாகன ஓட்டிகள்
/
ரோசல்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகள் தினசரி திண்டாடும் வாகன ஓட்டிகள்
ரோசல்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகள் தினசரி திண்டாடும் வாகன ஓட்டிகள்
ரோசல்பட்டியில் தொடரும் ஆக்கிரமிப்புகள் தினசரி திண்டாடும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 03, 2024 04:07 AM
விருதுநகர்:விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி செல்லும் ரோட்டில் ரோசல்பட்டி பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
விருதுநகர் நகராட்சிக்கு அருகே ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது. ஊராட்சியாக இருந்தாலும் நகர் பகுதிக்கு அருகே இருப்பதால் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி, கல்குறிச்சி, மல்லாங்கிணர், அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான ரோடு ரோசல்பட்டி வழியாக செல்கிறது.
குடியிருப்புகள் அதிகரிப்பால் ரோசல்பட்டி ரோட்டில் மளிகை, இறைச்சி கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல நெடுஞ்சாலைத்துறையின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது.
கடைகள் வைத்துள்ளவர்கள் தங்களின் எல்கையை கடந்து ரோட்டில் இரும்பு கம்பியால் கூண்டு, தகர செட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க டூவீலரில் வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டில் வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதே போல வாடிக்கையாளர்கள் பலர் செய்வதால் காரியாப்பட்டி ரோட்டில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றன.
விருதுநகர் அரசு மருத்துவனைக்கு செல்லும் முக்கிய ரோட்டில் தொடரும் ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோவில் அவசரமாக சிகிச்சை செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுவது தொடர் கதையாக மாறியுள்ளது. இது குறித்து பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோசல்பட்டி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.