/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆனைக்குளத்தில் இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
/
ஆனைக்குளத்தில் இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
ADDED : ஆக 20, 2025 07:08 AM

நரிக்குடி; நரிக்குடி ஆனைக்குளத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
நரிக்குடி ஆனைக்குளத்தில் தண்ணீர் சப்ளை செய்ய குடியிருப்புகளுக்கு மத்தியில் 35 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் கட்டடம் விரிசலடைந்து கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. தூண்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. முழு அளவில் நீர் ஏற்றும் போது எடை தாங்காமல் இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு முன் அவற்றை அப்புறப்படுத்துவதோடு, தற்போதய மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் சப்ளை செய்ய கூடுதல் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.