/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பூங்கா அவதியில் விருதுநகர் ராமச்சந்திரன் தெரு மக்கள் அவதி
/
கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பூங்கா அவதியில் விருதுநகர் ராமச்சந்திரன் தெரு மக்கள் அவதி
கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பூங்கா அவதியில் விருதுநகர் ராமச்சந்திரன் தெரு மக்கள் அவதி
கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பூங்கா அவதியில் விருதுநகர் ராமச்சந்திரன் தெரு மக்கள் அவதி
ADDED : நவ 18, 2024 07:02 AM

விருதுநகர் : செயல்பாடற்ற நிலையில் மேல்நிலைக்குடிநீர் தொட்டி, கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய பூங்கா வளாகம், வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை, புதிய இரும்பு குழாயில் குடிநீர் கசிவு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் ராமச்சந்திரன், அல்லி தெரு, ரயில்வே பீடர் ரோடு மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் ராமச்சந்திரன் தெருவில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளவில் மேல்நிலைக்குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இங்குள்ள பூங்கா வளாகம் கட்டட கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதன் சுற்றுச்சுவர் அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து வாலிபர்கள் சிலர் கஞ்சா அடிப்பதற்காக பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.
இவ்வழியாக பெண்கள், வயதானவர்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். மேலும் அல்லித்தெருவில் ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் கூரை ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் அமைக்கப்பட்டு இருப்பதால் மழைக்காலத்தில் சேதமான கூரை வழியாக மழை நீர் உட்புகுந்து பொது விநியோகப்பொருட்கள் பாழாகும் நிலை தொடர்கிறது. மேலும் பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் சேதமாகி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் ரயில்வே பீடர் ரோட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதமாகி தொடர்ந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இப்பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் முதல் அரை மணி நேரத்திற்கு அதிக உப்புத்தன்மையுடன் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் வரும் போது எல்லாம் அரை மணி நேரம் கழித்த பின்பு தேவையான குடிநீரை பிடிக்கின்றனர்.
விருதுநகர் நகராட்சி ராமச்சந்திரன் தெருவில் 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மேல்நிலைக்குடிநீர் தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. இதை சீரமைத்து மறு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்கும்.
- யோகேஷ், ரியல் எஸ்டேட்.
ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டும் சேதமான நிலையில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து தினமும் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீரமைத்து குடிநீர் வீணாவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- -விஜயகுமார், எலக்ட்ரீசியன்
அல்லித்தெருவில் வாடகை கட்டடத்தில் இடப்பற்றாக்குறையில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதை சொந்த கட்டடமாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாரியப்பன், கடை உரிமையாளர்.