/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி
/
மின்வேலியை தொட்டவர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : அக் 22, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அருணாச்சல பாண்டியன் 40. லோடுமேனாக இருந்தார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர் புதுக்கோட்டையில் தர்மர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றார். தோட்டத்தை சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனை அருணாச்சல பாண்டியன் தொடவும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.