/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யாத்திரையால் மக்களுக்கு காங்., மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது மேலிட பார்வையாளர் பேட்டி

ADDED : நவ 25, 2025 03:05 AM
விருதுநகர்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்த பாரத் ஜோடோ யத்திரையால் மக்களுக்கு காங்.,மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது, என விருதுநகரில் மேலிட பார்வையாளர் பிஸ்வ ரஞ்சன் மொகந்தி தெரிவித்தார்.
அவர் மேலும் நிருபர் களிடம் கூறியதாவது:
காங்., புதிய தலைமையை வளர்க்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. எம்.பி., ராகுல் சமூக நீதிக்காக போராடுகிறார். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக சங்கதன் சிருஜன் அபியான்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் காங்., கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் ராஜா சொக்கர், ரங்கசாமி, எம்.எல்.ஏ., அசோகன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆஸ்கர் பிரடி, காமராஜ், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.