/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் இரவு ரோந்து பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கண்காணிப்பா' கண்துடைப்பாக மாறும் நடைமுறை
/
போலீஸ் இரவு ரோந்து பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கண்காணிப்பா' கண்துடைப்பாக மாறும் நடைமுறை
போலீஸ் இரவு ரோந்து பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கண்காணிப்பா' கண்துடைப்பாக மாறும் நடைமுறை
போலீஸ் இரவு ரோந்து பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கண்காணிப்பா' கண்துடைப்பாக மாறும் நடைமுறை
ADDED : செப் 02, 2025 05:58 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து செல்லும் போது பட்டா புத்தகத்தில் நாள், நேரம், பெயர் எழுதி கையெழுத்து போட வேண்டும். ஆனால் புறநகர், ஊரகப்பகுதிகளில் பட்டா புத்தகத்தில் கையெழுத்து போடாமல் இருப்பதால் போலீசார் ரோந்து பணி செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் இரவு நேரத்தில் நடக்கும் டூவீலர், கார், டிராக்டர் திருட்டுக்கள், வீடுகளில் பூட்டை உடைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
ஆனால் இரவு ரோந்து பணியில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டா புத்தகத்தில் நாள், நேரம், பெயர் எழுதி கையொப்பமிட்டு செல்ல வேண்டும். இதை வைத்து இரவு ரோந்துக்கு யார் வந்து சென்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் புறநகர், ஊரகப்பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து செல்லும் போது பட்டா புத்தகத்தில் கையொப்பம் போடாமல் செல்கின்றனர்.
மக்கள் நலனிற்காகவும், பணிகளை செய்தற்கான ஆவணம் இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட பட்டா புத்தகம் நடைமுறையை பின்பற்றுவதில் போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பட்டா புத்தகம் நடைமுறை கண்துடைப்பாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் அண்டை மாவட்டங்களுக்கு வரும் அரசியல் முக்கியஸ்தர்கள் நிகழ்ச்சிகளுக்கு அனைத்து ஸ்டேஷன்கள், ஆயுதப்படையில் இருந்து பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷன் பணிக்கு ஆட்கள் இல்லாத நிலையில் இரவு ரோந்து பணிக்கு போலீசாரை அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் போலீசார் இரவு ரோந்து செல்லும் போது பட்டா புத்தகத்தில் தங்கள் பதிவை முறையாக செய்கிறார்களா என அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.