/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோண்டாமல் போடப்படும் ரோடுகளால் சிக்கல்! பள்ளத்திற்குள் செல்லும் வீடுகளால் தவிப்பு
/
தோண்டாமல் போடப்படும் ரோடுகளால் சிக்கல்! பள்ளத்திற்குள் செல்லும் வீடுகளால் தவிப்பு
தோண்டாமல் போடப்படும் ரோடுகளால் சிக்கல்! பள்ளத்திற்குள் செல்லும் வீடுகளால் தவிப்பு
தோண்டாமல் போடப்படும் ரோடுகளால் சிக்கல்! பள்ளத்திற்குள் செல்லும் வீடுகளால் தவிப்பு
ADDED : மார் 09, 2024 08:47 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டை தோண்டாமல் புதிய ரோடு போடுவதால் வீடுகள் பள்ளத்துக்குள் சென்று மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காக ரோடுகள் தோண்டப்பட்டு மீண்டும் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு புதிய ரோடுகள் அமைக்கும் போது ஏற்கனவே உள்ள பழைய ரோட்டை முற்றிலும் தோண்டி எடுக்காமல் அதன் மேலேயே உயர்த்தி போட்டு வருவதால் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் மேம்பாட்டு பணிகளுக்காக ரோடுகள் முற்றிலும் தோண்டப்பட்டு புதிய ரோடுகள் பணி நடந்து வருகிறது. மெயின் ரோடுகள் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மட்டும் தார், சிமிண்ட், பேவர் பிளாக் ரோடுகள் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ளது.
மீதம் உள்ளவைகளுக்கு மேம்பாட்டு பணிகள் முழுமை அடையாதது, ஒப்பந்ததாரர்கள் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் முடிக்காமல் வைத்துள்ளனர்.
ரோடு மீது ரோடு போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீதிமன்றமும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே போடப்பட்ட புதிய ரோடு பழைய ரோட்டை விட அதிக உயரமாக போட்டுள்ளதால் வீடுகளின் கதவுகள் திறக்க முடியாமலும், வாகனங்களை உள்ளிருந்து வெளியே எடுக்க முடியாமலும், மழைக்காலங்களில் சாக்கடையுடன் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து குடிநீர் தொட்டிகளில் பாய்வது, வீடுகளின் கழிவு நீர் வெளியேற முடியாமலும் போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இனி மீதம் உள்ள ரோடு பணிகளின் போதாவது பழைய ரோடு இருந்த அளவை விட உயரம் அதிகமாகாத வகையில் போட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வுடன் கேள்வி கேட்ட சில குடியிருப்புவாசிகளின் தெருக்களையும் தற்போது வரை ரோடு போடாமல் ஒப்பந்ததாரர்கள் வைத்துள்ளனர்.
அரசு அறிவுறுத்தலை மீறி ரோட்டின் உயரத்தை அதிகப்படுத்தும் ஒப்பந்ததாரர்களை கண்காணிப்பதோடு மீறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

