/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் தாராளமாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ADDED : ஆக 11, 2025 03:21 AM
விருதுநகர்: 2019ல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் உற்பத்தி குறைந்ததை கருத்தில் கொண்டு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விருதுநகரில் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.
தமிழகத்தில் 2019 ஜன. 1 முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியும் கேரி பை, பிளாஸ்டிக் கப் போன்ற பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு தடை விதிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் கொஞ்சம் தீவிரமாக பின்பற்றப்பட்டதால் தமிழகத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூடுவிழா கண்டன. இவர்களில் சிலர் பயோ பிளாஸ்டிக் என உற்பத்தி செய்தனர். மாவட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பலதரப்பினர் ஆய்வு செய்வர். இந்நிலையில் உற்பத்தி குறைந்தாலும், ஆங்காங்கே சிலர் திருட்டுத்தனமாக உற்பத்தி செய்வது தற்போதும் தொடர்ந்து வருகிறது. ஆனால் விருதுநகர் நகராட்சியில் முன்பு போல் பிளாஸ்டிக் கட்டுப்பாடு குறித்த ஆய்வுகள் இல்லை. இதனால் கடைகளில் பிளாஸ்டிக் பை புழக்கம் தாராளமாகி உள்ளது. பிளாஸ்டிக் கப், தட்டுகள் பயன்பாட்டில் இல்லை என்றாலும், உணவு பார்சல் செய்ய பயன்படுத்தும் தாள், கேரி பை போன்றவை பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யும் போது ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் இருந்து ரயில், பஸ் மூலம் பார்சல்களில் வருவது தெரிந்துள்ளது. வழக்கமாக நகராட்சி அதிகாரிகள் கடைகளிலும், பிளாஸ்டிக் உற்பத்தி கூடங்களிலும் தான் ஆய்வு செய்வர். ஆனால் உற்பத்தி கூடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், உணவு பாதுகாப்புத்துறையும் நேரடி ஆய்வு செய்யும். உற்பத்திக்கு கெடுபிடி உள்ளதை போல் கடைகளில் இல்லாததால் தற்போது வெளிமாநிலங்கள் மூலம் கொண்டு வரப்படும் இவை சர்வசாதாரண புழக்கத்தில் இருந்து வருகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் இதை கண்காணித்து, 2019ல் அறிவித்த பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.