/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருவண்ணாமலை கோயிலில் நாளை புரட்டாசி சனி உற்ஸவம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

ADDED : செப் 19, 2025 01:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்புடன் துவங்குகிறது.
இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் நாளை செப். 20, செப். 27, அக். 4, அக்.11, அக்18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.
அக்.4 மூன்றாம் சனிக்கிழமை அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உற்ஸவ நாட்களில் மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.