/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு காரணம்
/
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு காரணம்
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு காரணம்
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு காரணம்
ADDED : மே 04, 2025 05:01 AM
சிவகாசி : காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது. என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க., சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தி.மு.க.,வை சேர்ந்தவர்களே தவறு செய்வதால் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, ஒரு கோடி கையெழுத்து பெற்றும் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை.
தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த 22 மாணவிகள் தற்கொலைக்கு முதல்வர் தான் காரணம். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது. ஆளும் தகுதியை தி.மு.க., இழந்து விட்டது. சிவகாசி சுற்றுச் சாலை, ரயில்வே மேம்பாலம் ஆகியவை அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு தி.மு.க., காங்., கட்சியினர் வழக்கு தொடர்ந்து நிறுத்தி வைத்து விட்டு, தற்போது நாங்கள் தான் கொண்டு வந்தோம் என விளம்பரம் செய்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை ஒன்று முடக்குகின்றனர் அல்லது ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மானிய கோரிக்கையில் காவல்துறைக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சியில் கொள்ளை அடிக்கின்றனர்.
சிவகாசியில் பட்டாசு ஆலை உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசு தான் காரணம். தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப பட்டாசு தொழிலாளர்கள் சபதம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

