/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செம்பட்டியில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
/
செம்பட்டியில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
செம்பட்டியில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
செம்பட்டியில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்
ADDED : நவ 23, 2025 04:42 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி பகுதிகளில் மஞ்சள், வெள்ளை நிற செவ்வந்தி பூக்கள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி, தொட்டியான்குளம், குலசேகரநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் சாகுபடி நடக்கும். செவ்வந்தி பூக்களுக்கு குளிர்ச்சியான காலநிலை மிகவும் அவசியம் .செம்மண்ணில் நன்கு வளரும். இதே சீதோஷண நிலை கிராமங்களில் இருப்பதால், 3 மாதங்களுக்கு முன்பு செவ்வந்தி நாற்றுகள் நடப்பட்டது. தற்போது குளிர்ச்சியான சூழ்நிலையில் பூக்கள் பூத்துக் குலுங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அசோக்குமார் விவசாயி: நான் மூன்று ஏக்கரில் வெள்ளை. மஞ்சள் நிற செவ்வந்தி பூக்கள் விவசாயம் செய்து வருகிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில் பூக்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்து உள்ளது. ஒரு கிலோ செவ்வந்தி ரூ.200 லிருந்து 250 வரை விலை போகும். பெங்களூருவில் இருந்து நாற்றுகள் வாங்கி வந்து நட்டுள்ளேன். ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 கிலோ வரை பூக்கள் கிடைக்கும்.

