/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளரும் தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்
/
வளரும் தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்
வளரும் தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்
வளரும் தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்
ADDED : டிச 29, 2025 06:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: வளரும் தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்,'' என ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் ஜீயர்கள், ஆதினங்கள் வலியுறுத்தினர்.
விழாவில் கமிட்டி துணைத் தலைவர் முத்து பட்டர் வரவேற்றார். சடகோப ராமானுஜர் ஜீயர் பேசுகையில், நூலகங்கள் மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பென்னிங்டன் நூலகம் 150 ஆண்டுகளைக் கடந்து மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறோம் என்றார்.
திருக்குறுங்குடி இராமானுஜர் ஜீயர் பேசுகையில், நூலகத்தில் உள்ள நூல்கள் காலப்போக்கில் சேதமாகி விடாதபடி அவைகளை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம் என்றார்.
பெருங்குளம் சிவப்பிரகாச செங்கோல் ஆதினம் பேசியதாவது; வாசிப்பு என்பது கணினிக்கும், கைபேசிக்கும் மாறிவிட்டதால் நூல்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
திண்டுக்கல் சிவபுர ஆதினம் பேசியதாவது; இன்றைய விஞ்ஞான உலகில் வாசிப்பு பழக்கம் சுருங்கி வருகிறது. இப்போது வளர்ந்து வரும் இளைய தலைமுறை அறவே வாசிப்பில் ஈடுபடுவதில்லை. இது ஒரு கவலை தரும் போக்கு. அறிவு வளர்ச்சிக்கு நூல்களின் வாசிப்பு அவசியம். இதனை இன்றைய இளைய தலைமுறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் கமிட்டி நிர்வாகிகள் ராதா சங்கர், ஜெயக்குமார், சிவக்குமார், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். ராஜாராம் நன்றி கூறினார்.

