/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் விபத்து அபாயம்
/
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் விபத்து அபாயம்
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் விபத்து அபாயம்
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : பிப் 20, 2025 07:00 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் அரளிச்செடிகள் வளர்க்கப்படாததால் இரவு நேரங்களில் எதிர் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு நான்கு வழிச்சாலை செல்கிறது. தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. துாத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் பகல், இரவு பாராது பயணிக்கின்றன. இரவு நேரங்களில் மற்றொரு பாதையில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் கண்களை கூசாமல் இருப்பதற்கு நான்கு வழி சாலை நடுவில் மீடியன் அமைக்கப்பட்டு அதில் செவ்வரளி உள்ளிட்ட செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இவைகள் அடர்த்தியாக வளருவதால் எதிரே வரும் வாகனத்தின் ஒளியை தடுத்து விடுகின்றன. மேலும் பகல் நேரத்தில் பசுமையான சூழலுடன் இருக்கும்.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதி வழியாக செல்லும் நான்கு வழி சாலை சென்டர் மீடியனில் செடிகள் எதுவும் இல்லாமல் புற்கள் முளைத்துள்ளது. எந்தவித பராமரிப்பு இன்றி உள்ளது. கடும் வெயிலால் நடப்பட்ட செடிகளும் கருகி விடுகின்றன. இவற்றை தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும் கிடையாது. இதனால் இந்த பகுதி வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் எதிரே ஒரு வாகனங்களின் வெளிச்சத்தால் தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கஞ்சநாயக்கன்பகுதி சந்திப்பில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்தப் பகுதி நான்கு வழிச்சாலை நடுவில் செடிகளை வளர்த்து பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்த வேண்டும்.