/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வறுகாலில் குடிநீர் வால்வு: கழிவுநீர் கலக்கும் அபாயம்
/
வறுகாலில் குடிநீர் வால்வு: கழிவுநீர் கலக்கும் அபாயம்
வறுகாலில் குடிநீர் வால்வு: கழிவுநீர் கலக்கும் அபாயம்
வறுகாலில் குடிநீர் வால்வு: கழிவுநீர் கலக்கும் அபாயம்
ADDED : பிப் 21, 2025 07:11 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே புதிய பேவர் பிளாக் பணி முடிந்து குடிநீர் குழாய்க்கான திறப்பு வால்வை வாறுகால் நடுவே வைத்து பணியை முடித்து அதிகாரிகள் சென்றதால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் இருப்பதால் மாற்றி அமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் ரோட்டில் சோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேசிகாபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.9.70 லட்சத்தில் பேவர் பிளாக், வாறுகால் அமைக்கும் பணி நடந்துள்ளது.
இந்நிலையில் பேவர் பிளாக் ரோட்டில் அமைக்கப்பட்ட வாறுகாலில் குடியிருப்பு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளைக்கான மெயின் திறப்பு வால்வை அமைத்து பணிகளை முடித்துள்ளனர். அவசர கதியில் பணிகளை முடித்துச் சென்றுள்ளதுடன் சாக்கடையில் கழிவுநீர் செல்லும்போது குடிநீரில் கலக்கும் வாய்ப்புள்ளதால் மாற்றி அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவிந்தராஜ்: சாலை பணிகளின் போது ஆட்கள் இல்லாத நேரம் குடிநீர் குழாய்க்கான திறப்பு வால்வை வாறுகாலில் அமைத்து முடித்து விட்டனர். இது குறித்து கேள்வி எழுப்பினாலும் முறையான பதில் இல்லை. மக்கள் நலன் கருதி இதை மாற்றி அமைக்க வேண்டும்.

