/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை, பயன்படாத கட்டடம் அவதியில் விருதுநகர் சின்னப்பரெட்டியபட்டி மக்கள்
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை, பயன்படாத கட்டடம் அவதியில் விருதுநகர் சின்னப்பரெட்டியபட்டி மக்கள்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை, பயன்படாத கட்டடம் அவதியில் விருதுநகர் சின்னப்பரெட்டியபட்டி மக்கள்
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை, பயன்படாத கட்டடம் அவதியில் விருதுநகர் சின்னப்பரெட்டியபட்டி மக்கள்
ADDED : அக் 28, 2024 04:51 AM

விருதுநகர் : பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சுகாதாரக்கேடு, கண்மாய் கரையில் ரோடு இல்லாததால் சுற்றிச் செல்லும் அவலம், ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை என எண்ணற்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் விருதுநகர் செங்கோட்டை ஊராட்சி சின்னப்பரெட்டியபட்டி மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பரெட்டியபட்டி பகுதியில் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அங்கன்வாடி மையமும் அருகே ஓரே இடத்தில் செயல்படுகிறது. இதை சுற்றி சுற்று சுவர் எதுவும் கட்டப்படவில்லை. பள்ளி வளாகத்தை இரவு நேரத்தில் கழிப்பறையாகவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இதன் அருகே உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இங்குள்ள ரேஷன் கடை கட்டடம் கூரைகள் சேதமானதால் தற்போது அருகே உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் கடை செயல்படுகிறது.
இங்கிருந்து மதுரைக்கு பஸ்சில் செல்ல வேண்டுமென்றால் அழகாபுரி, விருதுநகர் சென்று அங்கிருந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் இங்குள்ள கண்மாய் கரையில் ரோடு அமைத்து கொடுத்தால் டி.கல்லுப்பட்டிக்கு சென்று மதுரைக்கு எளிதாக சென்று வர முடியும்.
மோகனேரி கண்மாய் துார்வாரி பல ஆண்டுகளாவதால் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது தண்ணீர் நிறைந்து ஊருக்குள் வந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அண்டை வீடுகளில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி இரண்டையும் சுற்றி சுற்று சுவர் கட்டிக்கொடுத்தால் மாணவர்கள் பாதுகாப்பாக வளாத்திற்குள் இருப்பர். கண்மாய் ரோடு மண்ரோடாக பல ஆண்டுகளாக இருப்பதால் மழையில் சேறும் சகதியுமாகி விடுகிறது. இதில் ரோடு அமைத்து கொடுத்தால் மக்கள் தினமும் சென்று வர ஏதுவாக இருக்கும்.
- தமிழ் செல்வன், டிரைவர்.
ரேஷன் கடை கட்டடம் சேதமாகி பல ஆண்டுகளாவதால் தற்போது கிராம ஊராட்சி சேவை மையத்தில் கடை செயல்படுகிறது. சேதமான செயல்பாட்டில் இல்லாத கட்டடத்தை இடித்து விட்டு புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும். மோகனேரி கண்மாயை துார்வாரி தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்.
- பிரேம் குமார், விவசாயி.

