/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய பாரதத்தின்சுயசார்பு யாத்திரை
/
புதிய பாரதத்தின்சுயசார்பு யாத்திரை
ADDED : அக் 05, 2025 03:17 AM
விருதுநகர், : கதர், கிராமத்தொழில்கள் ஆணையம் சார்பில் செப். 17 முதல் அக். 23 வரை காதி மகா உற்சவம் நடக்கிறது. மேலும் அக். 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கே.வி.ஐ.சி., மதுரை மண்டல அலுவலகத்தின் சார்பில் விருதுநகரில் புதிய பாரதத்தின் சுயசார்பு யாத்திரை நடந்தது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் சர்வோதய சங்க அலுவலகத்தில் துவங்கிய கதர் யாத்திரை பராசக்தி மாரியம்மன் கோவில் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் நிறைவடைந்தது.
மண்டல அலுவலக இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி தலைமையில் கதர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கே.வி.ஐ.சி., மதுரை அலுவலக ஊழியர்கள், விருதுநகர் சர்வோதயா சங்க நிர்வாகிகள், நுாற்போர்கள், நெய்வோர்கள், திருமங்கலம் சர்வோதய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.