/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் இல்லை குப்பைகளை எரிப்பதால் சுவாசக்கோளாறு புளியம்பட்டி நெசவாளர் காலனியின் அவலம்
/
குடிநீர் இல்லை குப்பைகளை எரிப்பதால் சுவாசக்கோளாறு புளியம்பட்டி நெசவாளர் காலனியின் அவலம்
குடிநீர் இல்லை குப்பைகளை எரிப்பதால் சுவாசக்கோளாறு புளியம்பட்டி நெசவாளர் காலனியின் அவலம்
குடிநீர் இல்லை குப்பைகளை எரிப்பதால் சுவாசக்கோளாறு புளியம்பட்டி நெசவாளர் காலனியின் அவலம்
ADDED : அக் 05, 2025 03:10 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி நெசவாளர் காலனியில் குடிநீர் வசதி இல்லாமலும், குப்பையை ஆங்காங்கு கொட்டி எரிப்பதால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புளியம்பட்டி நெசவாளர் காலனி. இங்கு 3 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மக்கள் தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சங்கிலி நகரில் எந்தவித வசதிகளும் இல்லை. பல தெருக்களில் ரோடு இல்லை. வாறுகாலின்றி கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. ஊராட்சி மூலம் குடிநீர் வழங்குவதற்காக பகிர்மான குழாய்கள் பதிக்க தோண்டி விட்டு இருக்கின்ற ரோட்டையும் சேதமாக்கி விட்டனர். ஆங்காங்கு மேடும் பள்ளமுமாக தெருக்களில் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் டெபாசிட் தொகை கட்டி 2 ஆண்டுகளாகியும் குடிநீர் வரவில்லை. குழாய் இணைப்பு கொடுத்ததோடு சரி. இந்தத் திட்டத்தில் போடப்பட்ட பகிர்மான குழாய்கள் பல பகுதிகளில் பெயர்ந்துள்ளது. தாமிரபரணி குடிநீரும் வருவது இல்லை. புதிய திட்டத்திலும் குடிநீர் இல்லை. குடிநீரை அதிக விலை கொடுத்து வெளியில் வாங்குகின்றனர். தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கு தேங்கி கிடக்கின்றன. ஊராட்சி மூலம் குப்பைகளை வாங்க வருவது இல்லை. குப்பைகளை தெருவின் பல பகுதிகளில் கொட்டி எரிப்பதால் சுவாச கோளாறு ஏற்படுகிறது.
ஆண்களுக்கு என தனியாக சுகாதார வளாகம் தேவை. இங்குள்ள ஊருணி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கழிவுநீர் தான் சேர்கிறது. ஊராட்சி நிர்வாகம் இதை பராமரிக்க வேண்டும். பல தெருக்களில் தெரு விளக்குகள் பழுதாகி உள்ளன.