நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த வழிபாடுகளில் திறளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், சந்தனம், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சொக்கர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், குருசாமி கோயில், பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் வழிபாடு நடந்தது.