/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவியை தனியாக விசாரித்த எஸ்.ஐ., உடனடியாக இடமாற்றம்
/
மாணவியை தனியாக விசாரித்த எஸ்.ஐ., உடனடியாக இடமாற்றம்
மாணவியை தனியாக விசாரித்த எஸ்.ஐ., உடனடியாக இடமாற்றம்
மாணவியை தனியாக விசாரித்த எஸ்.ஐ., உடனடியாக இடமாற்றம்
ADDED : நவ 28, 2024 02:43 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முத்துக்குமார், 41. இவரிடம், செம்பட்டியை சேர்ந்த ஒரு பெண், தன் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மகளை, நவம்பர் 14ம் தேதியில் இருந்து காணவில்லை என, நவ., 19ம் தேதி புகார் கொடுத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, மாணவி, ஒரு வழக்கறிஞருடன் ஸ்டேஷனுக்கு வந்தார். 'தனியாக விசாரிக்க வேண்டும்' என போலீசார் ஓய்வு அறைக்கு, அந்த மாணவியை எஸ்.ஐ., கூட்டிச் சென்றார்.
இது குறித்து எஸ்.பி., கண்ணனுக்கு, உடனடியாக தகவல் தரப்பட்டது. இதையடுத்து, இரவோடு இரவாக முத்துக்குமாரை ஆயுதப்படைக்கு மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணனுக்கு, எஸ்.பி., உத்தரவிட்டார்.
மாணவியிடம் நேற்று காலையில் ஏ.எஸ்.பி., விசாரித்த போது, எஸ்.ஐ., தன்னை ஓய்வு அறைக்கு தனியாக கூட்டிச் சென்று விசாரித்ததை உறுதிபடுத்தினார். இந்த தகவல், அறிக்கையாக எஸ்.பி.,யிடம் வழங்கப்பட்டது.