ADDED : மார் 04, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த பாலமுருகன் சிறுகுளம் கண்மாயில் பிரண்டை செடி பறிப்பதற்காக சென்றார்.
அப்போது நட்சத்திர ஆமை வந்ததை கண்ட அவர் அதைப்பிடித்து அப்பகுதி கவுன்சிலர் தங்கபாண்டியம்மாளிடம் ஒப்படைத்தார். அவர் சிவகாசி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

