/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரம் போடும் மின்கம்பங்கள் புதையும் அவலம் மழை, வெயிலில் வாடும் கொடுமை
/
ரோட்டோரம் போடும் மின்கம்பங்கள் புதையும் அவலம் மழை, வெயிலில் வாடும் கொடுமை
ரோட்டோரம் போடும் மின்கம்பங்கள் புதையும் அவலம் மழை, வெயிலில் வாடும் கொடுமை
ரோட்டோரம் போடும் மின்கம்பங்கள் புதையும் அவலம் மழை, வெயிலில் வாடும் கொடுமை
ADDED : ஆக 14, 2025 11:25 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மின்கம்பங்கள் சேதமானால் அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கள் சேதமாகும் போது, அது குறித்து புகார் பெற்றால், சிமென்ட் கம்பங்கள் பழைய கம்பங்கள் இடத்தில் நடப்படும். இது நல்ல விஷயமே. அதே நேரம் பழைய மின்கம்பத்தை முழுதும் அகற்றாமல், அதன் அருகே நடுகின்றனர். பழைய மின்கம்பத்தை சரித்து சாய்த்து வைக்கின்றனரே தவிர முழுமையாக உடைத்து அகற்றுவதில்லை. இதனால் ரோட்டோரங்களில் இடநெருக்கடி உள்ளது.
அதே போல் நகர்ப்பகுதிகளில் முக்கிய வீதிகளில் ரோட்டின் ஓரங்களில் மாதக்கணக்கில் புதிய மின்கம்பங்கள் கிடக்கின்றன. அதே ரோட்டில் வேறொரு மின்கம்பம் சேதமானால் வேறொரு மின்கம்பம் சேதமாகும் போது இதை எடுத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவரை இந்த மின்கம்பங்கள் ரோட்டின் ஓரத்தில் மண்ணில் புதையும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
குறிப்பாக மழை பெய்தால் ரோட்டில் ஓரங்களில் மழைநீர் தேங்குகிறது. ரோடு பள்ளமான ஒரு சில இடங்களில் மட்டுமே ரோட்டில் தேங்குகிறது. ரோட்டோரம் மின்கம்பங்கள் உள்ளதால் அதன் மீது தண்ணீர், மண் போன்ற காரணங்களாலும், மாதக்கணக்கில் ஒரே இடத்தில் இருப்பதாலும் அவை புதையுறும் நிலை உள்ளது.
மேலும் அருகே புதர்கள், செடிகள் அதிகரித்து விட்டால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் ஏற்படுகிறது. தேவைக்கேற்ப மின்கம்பங்களை துணை மின் நிலையங்களில் வைத்து விட்டு மற்றவற்றை தேவைப்படும் போது பயன்படுத்தலாம். ஆனால் ஊழியர் பற்றாக்குறையும், குறைந்த அளவிலான மின் வாரிய லாரிகள் மட்டுமே இயங்குவதால் இதை சாத்தியப்படுத்த முடிவதில்லை. ரோட்டோரம் போட்ட புதிய மின்கம்பங்கள் தரங்கெடாமல் பாதுகாக்கப்பட நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும்.