/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை வெயில் வந்தாச்சு தர்பூசணி சீசன் துவங்கியாச்சு
/
கோடை வெயில் வந்தாச்சு தர்பூசணி சீசன் துவங்கியாச்சு
கோடை வெயில் வந்தாச்சு தர்பூசணி சீசன் துவங்கியாச்சு
கோடை வெயில் வந்தாச்சு தர்பூசணி சீசன் துவங்கியாச்சு
ADDED : பிப் 17, 2024 04:28 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை குளிர்விக்கும் தர்பூசணி சீசன் விற்பனை துவங்கிவிட்டது.
அருப்புக்கோட்டையில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போதிருந்தே வெயில் வெளுத்து கட்டுகிறது. கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க, உடலில் நீர்சத்து அதிகரிக்க உதவும் தர்பூசணி விற்பனை துவங்கி விட்டது.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் தர்பூசணி விற்பனை களை கட்ட துவங்கி விட்டது. நரிக்குடி வீரசோழன் அருகே மினாக்குளம் தர்பூசணி புகழ் பெற்றது. இங்குள்ள செம்மண்ணில் தர்பூசணி நன்கு விளைவதுடன் நல்ல சுவையுடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, மினாக்குளத்தை சேர்ந்த விவசாயி பெத்துகாளை : நான் திருச்சுழி ரோட்டில் 6 ஆண்டுகளாக தர்பூசணி விற்கிறேன். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் அதிக அளவில் உள்ளது. இதனால் தர்பூசணி விற்பனை முன்னதாகவே துவங்கி விட்டது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு ஒரு விற்கப்படுகிறது. எங்கள் ஊர் தர்பூசணி நல்ல சுவையுடன் இனிப்பாக இருக்கும்.