/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிக்குறிப்பு குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு
/
பணிக்குறிப்பு குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு
பணிக்குறிப்பு குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு
பணிக்குறிப்பு குண்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : டிச 06, 2024 05:08 AM

காரியாபட்டி: காரியாபட்டி பணிக்குறிப்பு செல்லும் வழியில் குண்டாற்றின் குறுக்கே தரைமட்ட பாலமாக இருப்பதால் வெள்ளப்பெருக்கின் போது வாகனங்கள் செல்ல முடியாமல் பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதால், உயர் மட்ட பாலம் கட்ட எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பணிக்குறிப்பு வழியாக முருகையாபுரம், தாமரைக்குளம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பெரும்பாலும் காரியாபட்டிக்குத்தான் வரவேண்டும். இந்த வழித்தடத்தில் குண்டாறு செல்கிறது. அப்போது உள்ள சூழ்நிலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் தரைப்பாலம் அமைத்து போக்குவரத்திற்கு வகை செய்தனர். தற்போது வாகன பெருக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இந்நிலையில் மழை நேரங்களில் குண்டாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். தரைப் பாலத்தை மூழ்கடித்து செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாது. பல கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேரம், பணம் விரயமாவதுடன், அவசரத்திற்கு கூட எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. கிழவனேரி, உடையனாம்பட்டி செல்லும் வழியில் இருந்த தரைப்பாலம் அப்புறப்படுத்தப்பட்டு, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
தற்போது எவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் போக்குவரத்து தடையின்றி வாகனங்கள் சென்றுவர முடியும். அதேபோல் பணிக்குறிப்பு வழித்தடத்தில் உள்ள தரைப் பாலத்தை அப்புறப்படுத்தி உயர்மட்ட பாலம் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.