/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளின் பதவிக்காலம் ஜன.5ல் நிறைவு பெறுகிறது; சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைப்பு
/
ஊராட்சிகளின் பதவிக்காலம் ஜன.5ல் நிறைவு பெறுகிறது; சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைப்பு
ஊராட்சிகளின் பதவிக்காலம் ஜன.5ல் நிறைவு பெறுகிறது; சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைப்பு
ஊராட்சிகளின் பதவிக்காலம் ஜன.5ல் நிறைவு பெறுகிறது; சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைப்பு
ADDED : ஜன 02, 2025 11:57 PM
சிவகாசி; ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன. 5ல் நிறைவடைய உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சி உடன் 9 ஊராட்சிகளை இணைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, 2021ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதில் ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால், முதற்கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டு, 2021 அக். 21 முதல் மாநகராட்சி செயல்பாட்டுக்கு வந்தது. 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளின் பதவிக்காலம் ஜன. 5 ல் நிறைவடைய உள்ளதை அடுத்து, சிவகாசி மாநகராட்சி உடன் அறிவிக்கப்பட்ட 9 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதன் படி தற்போது 1.26 லட்சமாக உள்ள மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) கொண்ட சிவகாசி மாநகராட்சி உடன் 9 ஊராட்சிகளை இணைத்ததன் மூலம் 2.70 லட்சமாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாநகராட்சி எல்லை 19.89 ச.கி.மீ.,ல் இருந்து 121.80 ச.கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட ஊராட்சிகளுடன் சேர்த்து வார்டு மறு வரையறை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநகராட்சி கமிஷனர் அப்பகுதிகளுக்கு சிறப்பு அலுவலராக நியமிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.