/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்களால் சோதனை செயல்பாட்டிற்கு வந்தது
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்களால் சோதனை செயல்பாட்டிற்கு வந்தது
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்களால் சோதனை செயல்பாட்டிற்கு வந்தது
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்களால் சோதனை செயல்பாட்டிற்கு வந்தது
ADDED : பிப் 21, 2025 07:10 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வெளியில் இருந்து வருபவர்கள், அவர்களின் உடைமைகளை பாதுகாப்பு ஊழியர்கள் மெட்டல் டிடெக்டர்களால் முழு சோதனை செய்த பின்பே அனுமதிக்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும் பரிசோதனை, சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு சிறை கைதிகளுக்கான தனி வார்டு அமைக்க தேவையான இடத்தை வழங்க மருத்துவமனை நிர்வாகம் நான்கு ஆண்டுகளாக தயாராக இருந்தும் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இதனால் பெரும்பாலும் சிறை கைதிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றப்படுகின்றனர். இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சிகிச்சை பெறுபவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நடக்காமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் 10 மெட்டல் டிடெக்டர்களை வாங்கியது. இவற்றை வைத்து பாதுகாப்பு ஊழியர்கள் உள்நோயாளிகளை பார்ப்பதற்காக வரும் வெளி நபர்கள், அவர்களின் உடைமைகளை முழு சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் இணைந்து பணிபுரிகின்றனர். இதன் மூலம் மருத்துவமனையில் தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.