UPDATED : ஜூன் 16, 2026 06:04 PM
ADDED : ஜூன் 16, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 56. இவர் அக்ரஹார தெருவில் பலசரக்குக்கடை நடத்தி வருகிறார். இவர் கடையை ஜூன் 12ல் காலையில் திறக்க வந்த போது கூரை பிரிக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.
மேற்கு போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்ட மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த தங்கராஜ் 40, கைது செய்தனர். இவரிடம் ரூ.25 ஆயிரம், அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
