/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சிக்குள் வர மறுக்கும் தனியார் பஸ்களால் மக்கள் அவதி போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ADDED : பிப் 03, 2024 06:12 AM
காரியாபட்டி : கல்குறிச்சி ஊருக்குள் சென்று வருவதை தனியார் பஸ்கள் தவிர்த்து பைபாஸில் செல்வதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுரை -அருப்புக்கோட்டை வழித்தடத்தில் முக்கிய ஊர்களாக காரியாபட்டி, கல்குறிச்சி இருக்கிறது. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ஊர்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் காரியாபட்டி, கல்குறிச்சி ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும். இதனால் கல்குறிச்சியில் இறங்கும் பயணிகள் அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு எளிதில் செல்ல முடிந்தது.
இந்நிலையில் பைபாஸ் ரோடு போட்ட பின் தொலைதூர பஸ்கள் ஊர்களுக்குள் சென்று வருவதில்லை. கல்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தனியார் பஸ்களை நம்பியே பயணிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில தனியார் பஸ்கள் கல்குறிச்சி ஊருக்குள் சென்று வருவதை தவிர்க்கின்றனர். கல்குறிச்சிக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதையடுத்து பல்வேறு பஸ்கள் மாறி ஊருக்கு செல்ல வேண்டி இருப்பதால், நேரம், பணம் விரையம் ஆகிறது. உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதால், ஊருக்குள் சென்று வருவதை தவிர்க்கும் தனியார் பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.