/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்துடைப்புக்கு நடக்கும் கிராமசபைக் கூட்டங்கள் சிறுவர்களை அழைத்த அவலம்
/
கண்துடைப்புக்கு நடக்கும் கிராமசபைக் கூட்டங்கள் சிறுவர்களை அழைத்த அவலம்
கண்துடைப்புக்கு நடக்கும் கிராமசபைக் கூட்டங்கள் சிறுவர்களை அழைத்த அவலம்
கண்துடைப்புக்கு நடக்கும் கிராமசபைக் கூட்டங்கள் சிறுவர்களை அழைத்த அவலம்
ADDED : ஆக 16, 2025 02:26 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்கள் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது. சில ஊராட்சிகளில் குறைவான மக்கள் வருகையால், சிறுவர்களை அழைத்து கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. நிதியே போதிய அளவில் ஒதுக்காத சூழலில் பெரிய அளவில் தீர்மானங்கள் நிறைவேற்ற ஆர்வமில்லாத சூழல் காணப்பட்டது.
மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. நகராட்சிக் கூட்டங்களில் கவுன்சிலர்கள் அம்மக்களுக்காக பேசுவது போல், ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. சிறிய மக்கள் தொகை இருப்பதால் உறுப்பினர்களோடு, மக்களையும் அமர வைத்து கோரிக்கைகளை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுவது வாடிக்கை. பொதுசெலவினங்கள், வரியினங்கள், அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்படும். ஆனால் நகராட்சிக்கூட்டம் மாதம் ஒரு முறை கூட்டப்படும். ஆனால் கிராமசபை கூட்டங்களோ குடியரசு, சுதந்திர தினங்களில் மட்டுமே நடக்கும். 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர். ஏதாவது வாக்குவாதம் செய்தாவது தங்கள் பகுதிக்கான உரிமையை மக்கள் கேட்டு வாங்கினர்.
ஆனால் இப்போது ஊராட்சி செயலாளர்கள் இருப்பதாலும், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பொது நிதி செலவினங் களுக்கே சரியாக இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை வைத்தால் என்ன சரி செய்து விடுவார்களா என்ற தொனியில் மக்கள் பலர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதனால் நேற்றைய சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் பெரிதாக மக்கள் வரவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் அருகில் இருந்த சிறுவர்களை அழைத்து கூட்டத்தில் அமர வைக்கும் நிலை ஏற்பட்டது. முன்பு கிராமசபை கூட்டங்கள் நடக்கும் போது, ஊருக்கு பிரச்னையாக டாஸ்மாக் அகற்றுவது, பழைய குடிநீர் தொட்டிகளை இடிக்க மக்கள் வலியுறுத்துவது, அதற்கு கோரிக்கை வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இருப்பினும் பலர் அடிப்படை வசதி தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றினர்.