/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படுமோசமாக இருக்கும் இசலி ரோடு வாகனங்கள் செல்வதில் சிரமம்
/
படுமோசமாக இருக்கும் இசலி ரோடு வாகனங்கள் செல்வதில் சிரமம்
படுமோசமாக இருக்கும் இசலி ரோடு வாகனங்கள் செல்வதில் சிரமம்
படுமோசமாக இருக்கும் இசலி ரோடு வாகனங்கள் செல்வதில் சிரமம்
ADDED : அக் 10, 2025 02:59 AM
நரிக்குடி: நரிக்குடி இசலி இனக்கனேரி ரோடு படுமோசமாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நரிக்குடி இசலி - இனக்கனேரி, மைலி வழியாக பனைக்குடி, குமிலாங்குளம், எஸ்.மறைக்குளம், குறவைக்குளம், நாலூர் கிராம மக்கள் திருச்சுழிக்கு செல்ல வேண்டும். பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோடு படு மோசமாக இருக்கிறது. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. இரவு நேரங்களில் குண்டும் குழியுமாக இருக்கிறது. வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன. இதற்கு பயந்து பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நேரம், பணம் விரையமாகிறது. விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க, அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, படுமோசமாக இருக்கும் ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.