/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதாரமற்ற முறையில் தயாராகும் தீபாவளி பலகாரங்கள் --விழிக்குமா உணவு பாதுகாப்பு துறை

ADDED : அக் 10, 2025 02:59 AM
ராஜபாளையம்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு கூட்டத்தில் கொடுக்கப் பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி தீபாவளி ஸ்வீட் காரங்கள் தயாரிப்பில் பின்பற்றப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ராஜபாளையம் சுற்று பகுதியில் ஸ்வீட் காரங்கள் மொத்தமாக தயாரிக்கும் கூடங்கள் பல்வேறு அளவுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தீபாவளி சீட்டு பண்டிகை கால அன்பளிப்பு போன்ற ஆர்டர்களுக்காக கடைசி கட்ட முன் தயாரிப்பு பணிகள் வேகமெடுத்து வருகின்றன.
மொத்தமாக தயாரிக்கும் போது இவற்றில் பெரும்பாலான இடங்களில் லாப நோக்கம் கருதி மூலப் பொருட்கள் கலப்படம், செயற்கை நிறமி, மீதமான, கலப்பட சமையல் எண்ணெய், சுகாதாரமற்ற தயாரிப்பு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக்கிங், தயாரிப்பு தேதி என எந்தவித விதியும் பின்பற்றாததை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
இது குறித்து சங்கர், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை அறிக்கை வழங்கி கடமையை முடிக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் மக்கள் ஸ்வீட் காரங்களை வாங்கி செல்வதை வழக்கமாக்கி விட்டதால் இந்த பாதுகாப்பு நடைமுறை குறித்து கவனிப் பதில்லை.
இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை சாதாரண நாட்களிலேயே வேடிக்கை பார்த்து வரும் நிலையில் பண்டிகை காலங்களில் இது ஒரு கண்துடைப்பே.