/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படுமோசமான கிழவனேரி-வல்லப்பன்பட்டி ரோடு
/
படுமோசமான கிழவனேரி-வல்லப்பன்பட்டி ரோடு
ADDED : நவ 22, 2024 03:48 AM

காரியாபட்டி: காரியாபட்டி அருகே கிழவனேரி வல்லப்பன்பட்டி ரோடு படுமோசமாக குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல லாயக்கற்றதாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும்சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி கிழவனேரியிலிருந்து வல்லப்பன்பட்டி வரை உள்ள ரோடு 3 கி.மீ., தூரம் உள்ளது. இந்த ரோடு படுமோசமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. தொடர் வலியுறுத்தலால்5 ஆண்டுகளுக்கு முன் ரோடு சீரமைக்கப்பட்டது. வாகனங்கள் எளிதில் சென்று வந்தன.
செட்டிகுளம் தாமரைக்குளம், வெற்றிலைமுருகன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல இந்த வழித்தடத்தை பயன்படுத்தினர். தற்போது இந்த ரோடு சேதம் அடைந்து, குண்டும் குழியுமாகி படுமோசமாக மாறியது. 3 கி. மீ., தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆகிறது.
வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன. கண்மாய் கரையை ஒட்டி இருப்பதால் மண் சரிவு ஏற்பட்டு மழை நேரங்களில் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. டூவீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.
தற்போது இந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பலர் ஆண்மை பெருக்கி, அல்லாளப்பேரி வழியாக பல கி.மீ.,தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் நேரம் விரையம் ஆவதுடன், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால். சேதமடைந்த ரோட்டை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.