/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரும்பு சாய்த்து வைக்கப்பட்ட அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது
/
கரும்பு சாய்த்து வைக்கப்பட்ட அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது
கரும்பு சாய்த்து வைக்கப்பட்ட அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது
கரும்பு சாய்த்து வைக்கப்பட்ட அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது
ADDED : ஜன 14, 2025 10:45 PM

சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பொங்கல் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த கரும்புகள் சாய்த்து வைக்கப்பட்டதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
சிவகாசி அருகே திருத்தங்கல் மெயின் ரோட்டில் எஸ்.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியின் சுற்றுச்சுவர் முன்பு பொங்கலை முன்னிட்டு தனி நபர் ஒருவர் விற்பனைக்காக கரும்புகளை சாய்த்து வைத்திருந்தார்.
இதன் பாரம் தாங்காமல் 20 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் பள்ளி வளாகத்திற்குள் இடிந்து விழுந்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கரும்பின் பாரம் தாங்காமலேயே இடிந்து விழுந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியின் சுற்றுச்சுவர் மழையால் சேதமடைந்து விழுந்த நிலையில் கரும்பின் பாரம் தாங்காமல் சுற்றுச்சவர் சேதமடைந்து விழுந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்தில் உட்புறம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது மாணவர்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.