/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜவ்வாய் இழுக்கும் குழாய் பதிக்கும் பணிகள் நகர் பகுதிகளில் தொடரும் உப்புக்குடிநீர் சப்ளை
/
ஜவ்வாய் இழுக்கும் குழாய் பதிக்கும் பணிகள் நகர் பகுதிகளில் தொடரும் உப்புக்குடிநீர் சப்ளை
ஜவ்வாய் இழுக்கும் குழாய் பதிக்கும் பணிகள் நகர் பகுதிகளில் தொடரும் உப்புக்குடிநீர் சப்ளை
ஜவ்வாய் இழுக்கும் குழாய் பதிக்கும் பணிகள் நகர் பகுதிகளில் தொடரும் உப்புக்குடிநீர் சப்ளை
ADDED : டிச 26, 2024 04:30 AM
விருதுநகர்: விருதுநகர் நகர்ப்பகுதிகளில் ஜவ்வாய் இழுக்கும் தாமிரபரணி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால், உப்பு சுவை குடிநீர் வினியோகிப்பது தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு வார்டுகளில் மெயின் குழாய் பதிக்கும் பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில் இன்னும் பல வார்டுகளில் பணிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
இந்நிலையில் எக்ஸ்டென்ஷன் பகுதியான தங்கம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறமுள்ள வி.பி.பி.வி. நகரில் குழாய் பதிக்கின்றனர்.
டவுன் பகுதிகளில் பல இடங்களில் பதிக்க வேண்டிய சூழலில் புறநகர் பகுதியில் ஏன் பதிக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நகர்ப்பகுதியின் முக்கியமான குடிநீர் தொட்டிகளான ராமமூர்த்தி ரோடு குடிநீர் தொட்டி, மதுரை ரோட்டு குடிநீர் தொட்டிக்கும் பைப்லைன் பதிக்கவில்லை.
ரோசல்பட்டி ரோடு அண்ணாதுரை சிலையில் இருந்து இ.பி., அலுவலகம் வரை 120 மீட்டருக்கு குழாய் பதிக்காமல் உள்ளனர். இதை மட்டும் பதித்தால் ராமமூர்த்தி ரோடு தொட்டிக்கு தண்ணீர் ஏறி விடும். தற்போது வரை இந்த தொட்டியில் ஆனைக்குட்டம் நீரின் உவர்ப்பு சுவை குடிநீர் தான் வருகிறது.
இதனால் நகரின் ஒரு பகுதியில் உப்பு சுவை குடிநீரும், மற்றொரு பகுதியில் சுவையான தாமிரபரணி குடிநீரும் வினியோகம் ஆகிறது. ஆளுங்கட்சியினர் வார்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த 120 மீ.,க்கான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை சரியாக மேற்பார்வை செய்யாமல் உள்ளது. நகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.
ராமமூர்த்தி ரோடு குடிநீர் தொட்டியில் குழாய் பதிக்கப்பட்டால் 4, 12, 13, 17, 26, 28 ஆகிய வார்டுகளில் உப்பு சுவை குடிநீர் செல்வது நிறுத்தப்படும். தாமிரபரணி குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும்.
தற்போது ஆனைக்குட்டம் குடிநீரால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கண்காணித்து விருதுநகர் நகராட்சியின் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை ஆக்கப்பூர்வமான வகையில் முழுமைப்படுத்த வேண்டும்.