நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் முருகன்.
இவர் குடியிருப்பில் தனியாக வசித்து, மூன்று நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு லேப்டாப் திருடு போனது தெரிந்தது. மற்றொரு ரயில்வே ஊழியரான கருப்பசாமி என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் திருடு போனது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.